காத்தான்குடி: எஃப்.எம். மீடியா யுனிட் வசந்தம் சஞ்சிகைக் குழுவினர் ஏற்பாட்டில் சுவனத்தின் சுகந்த பாதைகள் ‘தேனருவி’ ஓடியோ இறுவெட்டு வெளியீடு இன்று காத்தான்குடி கடாபி ரெஸ்ட் இன்னில் பணிப்பாளர் ஐ.எல். மஜீட் தலைமையில் இடம்பெற்றது.
ரமழான் மாதத்தினை கண்ணியப்படுத்தும் நோக்கிலும் குர்ஆன் இறக்கப்பட்ட இந்த மாதத்தில் நாம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்ற அம்சங்களைத்தாங்கியும் முஸ்லிம் சேவை நிகழ்ச்சி ஒன்றில் நாம் எவ்வாறு ரமழான் நிகழ்ச்சிகளை செவிமடுக்கின்றோமோ அவ்வாறானதொரு உணர்வினை வெளிப்படுத்தும் ஓர் இறுவெட்டாக அமைந்துள்ளதாக இந்த இறுவெட்டு வெளியீட்டின்போது தெரிவிக்கப்பட்டது.
உளவளம் தொடர்பான வளவாளர் திரு சிரிதரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாத்திரமன்றி இந்த இறுவெட்டிற்கான நன்கொடை வழங்கியவர்களும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிட்த்தக்கது
Published by




Leave a comment