இலங்கை- தென்னாபிரிக்க அணிகள் மோதும் மூன்றாவது போட்டி இன்று

srilanka v southஹம்பாந்தோட்டை: இலங்கை- தென்னாபிரிக்க அணிகள் மோதும் கடைசியும் இறுதியுமான ஒரு நாள் போட்டி இன்று காலை 10 மணிக்கு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும்.

இரண்டு அணிகளும் 1-1 என தொடரில் சமநிலையில் உள்ள நிலையில் இப்போட்டியில் களமிறங்குகின்றமை விசேட அம்சமாகும். இலங்கை அணியில் சிரேஷ்ட வீரர்கள் நல்ல நிலையில் உள்ளனர். இளம் விரர்கள் தங்களது பங்களிப்பை வழங்கினால் இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றமுடியும்.

இலங்கை அணியில் பந்து வீச்சில் மலிங்க, தனது பங்கை சிறப்பான முறையில் செய்துவருகிறார் ஏனைய வீரர்கள் தங்களது பங்களிப்பை சரியான முறையில் வழங்கினால் தென்னாபிரிக்க அணிக்கு நெருக்குதல் களை கொடுக்கமுடியும். திலகரத்ன டில்சான் தனது பங் கிற்கு துடுப்பாட்டம்இ பந்து வீச்சில் தனது சிறந்த பிரதியை வெளிப்படுத்தும் நிலையில் ஒட்டுமொத்த இலங்கை அணி வீரர்கள் எதிரணிக்கு சவால்கொடுக்கும் நிலையில் உள்ளனர் என்றால் மிகையாது.

srilanka v south

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு இசுழல் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் தென்னாபிரிக்க அணி வீரர்கள் தடுமாறுவதைக் காணக்கூடியதாக உள்ளது. தென்னாபிரிக்க அணியைப் பொறுத்தவரை அம்லாவைத் தவிர ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தடுமாறுவதைக்காணலாம்

இலங்கை மண்ணில் இதுவரை எந்தத் தொடரையும் கைப்பற்றாத நிலையில் அந்த அணி பலப்பரீட்சை நடத்துகின்றமை முக்கிய அம்சமாகும்.

Published by

Leave a comment