ஜித்தா: சவுதிஅரேபியாவின் மிகப் பெரிய வர்த்தக நகரான ஜித்தா-‘பலத்’ பிரதேசத்தில் பிரதி ரமழான்தோறும் இடம்பெற்றுவரும் ரமழான் கொண்டாட்டம் வழமை போன்று இம்முறையும் கோலாகளமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
ஜித்தா மேயர் அபூ ராஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இக்கொண்டாட்ட நிகழ்வுகள் ரமழான் இரவு வேளையில் இடம்பெறும்.
இங்கு சவுதியின் பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகள், பாடல்கள் மற்றும் இன்னும் பல புராதன நாகரிகங்களை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் இடம்பெறும்.
‘இது சவுதி மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஓர் பண்டிகை மாத்திரமன்றி, இன்றைய இளைஞர் சமுதாயம் பாரம்பரிய சவுதி கலாச்சாரங்களை அறிந்து கொள்வதற்கும் ஓர் அறிய வாய்ப்பாக அமையும்’ எனவும் அபூ ராஸ் தெரிவித்தார்.
‘இந்த ‘பலத்’ கொண்டாட்டத்தில் குடும்ப சகிதம் கலந்து கொள்ள மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்த கோடை கால விடுமுறையையும், ரமழான் விடுமுறையையும் முன்னிட்டு அதிகளவாக மக்கள் இக்கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்கு ஜித்தாவுக்கு வருகின்றனர். மேலும் இந்நிகழ்ச்சிகள் புராதன ஜித்தாவின் வெளிப்பாட்டை மக்கள் அறிந்துகொள்ள வழிவகுக்கிறது’ என்பதாக ஏற்பாட்டாளர் அரீஜ் ஹலீல் தெரிவித்தார்.
Published by


Leave a comment