‘எமது பகுதியில் பிரதான தஃவா அமைப்புக்களாக காணப்படுவது மூன்று அமைப்புக்களாகும் இவ்வமைப்புக்கள் விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் செயற்படவேண்டும்’

???????????????????????????????– எம்.எச்.எம்.அன்வர்

 ‘எமது பகுதியில் பிரதான தஃவா அமைப்புக்களாக காணப்படுவது மூன்று அமைப்புக்களாகும் இவ்வமைப்புக்கள் விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் செயற்படவேண்டும்’ இவ்வாறு அஷ்ஷெய்ஹ் ஏ.ஜி.எம். ஜலீல்  (மதனி) தெரிவித்தார். 

காத்தான்குடி அல் மனார் அறிவியியற் கல்லூரியின் ஏற்பாட்டில் அல் மனார் வளாக அர்ராஷிக் மண்டபத்தில் உலமாக்களுக்கான நான்கு நாட்கள் இடம்பெற்ற பயிற்சி வகுப்பு இடம்பெற்றது. இந் நிகழ்வின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

???????????????????????????????

‘ஒவ்வொரு கால சூழலுக்கேற்ப ஒவ்வொரு தஃவா அமைப்புக்கள் தோன்றின தவ்ஹீத் அமைப்பின் ஸ்தாபகர் முஹம்மது இப்னு அப்துல் வஹாப் ஆவார். இவர் அக்காலத்தில் காணப்பட்ட பித்அத்துக்கள் அனாச்சாரங்கள் காணப்பட்டபோது இவ் அமைப்பை நிறுவினார். தப்லீக் அமைப்பின் ஸ்தாபகர் இல்யாஸ் றஹ்மதுல்லாஹி ஆவார். இவரும் பாவங்கள் செய்துகொண்டிருந்த மக்களை மீட்டெடுப்பதற்காக இவ் அமைப்பினை நிறுவினார்.

???????????????????????????????

‘அதே போல் ஜமாஅத் ஏ இஸ்லாமி அமைப்பின் ஸ்தாபகர் அபுல் அஃலா மஃதூதி ஆவார்.  இவரும் சீர்திருத்தம் ஒன்றினை முஸ்லிம்களுக்கு மத்தியில் கொண்டுவருவதற்கு தோற்றுவித்தார்.

எனவே அனைத்து அமைப்புக்களும் நல்லவற்றையே போதிக்கின்றன. ஆகவே நாம் சிறு சிறு சச்சரவுகளில் ஈடுபடாமல் விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் செயற்படவேண்டும்’ எனத்தெரிவித்தார்.

???????????????????????????????

மேற்படிநிகழ்வின் போது பயிற்சியை முடித்துக்கொண்ட 40 உலமாக்களுக்கு சான்றிதழ்களும் அன்பளிப்பகளும் வழங்கப்பட்டதுடன், இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது.

அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் ஏ எல் எம் மும்தாஸ் (மதனி) யின் ஏற்பாட்டிலும் சவுதி தனவந்தர்களின் நிதியினைக்கொண்டும் மேற்படி நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment