உலக முஸ்லிம்கள் ஒன்றுபடவேண்டிய நேரம்

APTOPIX Mideast Israel Palestinians– இர்ஷாத் றஹ்மத்துல்லா 

கொழும்பு: உலகலாவிய  ரீதியில் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன. இஸ்லாமியர்கள் என்பதால் இஸ்லாத்தின் எதிரிகளின் இலக்கு வித்தியாசமான நோக்கில் அமைந்துள்ளது.சிந்தணை ரீதியில் ஒரு வகையான மாயையை தோற்றுவித்து அதனை உண்மை வடிவமாக போதிக்கும் செயற்பாடுகளும், அதே போல் முஸ்லிம்களை ஆயுதம் மூலம் அழிக்கும் போரின் மூழமும் நிலையினை காணமுடிகின்றது.

அண்மையக்காலமாக இலங்கையிலும் அதே போன்று முஸ்லிம் நாடுகளிலும் கூட இந்த நிலையினை காணமுடிகின்றது.மிகவும் பரப்பாக பேசப்பட்ட பர்மா முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அண்மையக்கால முஸ்லிம் சமூகத்தினால் மறக்க முடியாததொன்றாகும்.

அதே போல் கடும் போக்கு மதவத அமைப்பான இஸ்ரவேலவர்கள் பலஸ்தீனத்தின் மீது மேற்கொள்ளும் ஈவிரக்கமற்ற விமான மற்றும் செல்வீச்சுக்கள் இன்று முஸ்லிம் சமூகத்தினை வேதணைக்குற்படுத்தியுள்ளது.புனித ரமழான் மாதம் என்பது முஸ்லிம்களின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவமிக்கதாகும்.இறைவனை அதிகமாக நினைவுபடுத்துவதும் அல்குர்ஆன் அருளப்பட்ட புனிதமிக்க ஒரு இரவை கொண்டதுமாகும்.

புனிதமிகு இம்மாதத்தில் அதிகம் அதிகம் மார்க்க விடயங்களில் ஈடுபடுவது கடமையாகிய போதும் அந்த கடமையினை நிம்மதியாக செய்வதற்கு இஸ்லாத்தின் எதிரிகள் விட்டுவைத்தப்பாடில்லை.குறிப்பாக காஸா மீது இரு தினங்களுக்கு முன் இஸ்ரேலிய பயங்கரவாதிகள் நடத்திய பல்குழல் ரொக்கட் தாக்குதலில் சிறார்கள், பெண்கள் மற்றும் வயோதிபர்கள் என பலர் சஹீதாக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் இந்த தாக்குதல் இடம் பெற்ற வண்ணம் உள்ளன.

உலகாவிய ரீதியில் குறிப்பாக முஸ்லிம் நாடுகள் இவ்விடயத்தில் எந்தளவுக்கு மேற்கத்திய கலாசார மற்றும் பொருளாதார கொள்கையுடன் உடன்பாடு கண்டிருக்கின்றார்கள் என்பதை வைத்து இந்த தாக்குதல்களுக்கான கண்டனங்கள் வெளிவருவது மிகவும் அரிதாகவே உள்ளது.அதே வேளை கட்டார் அரசாங்கம் இந்த தாக்குதல் தொடர்பில் தமது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

TOPSHOTS-PALESTINIAN-ISRAEL-GAZA-CONFLICT

அரபு நாடுகளின் கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்துவருவதுடன், ஜெனீவவாவின் மனித உரிமை காப்பகம் அவசரமான கூட்டமொன்றுக்கு தமது அதிகார நாடுகளுக்கு அழைப்புவிடுத்துள்ள செய்தியும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.இஸ்லாமிய எழுச்சியும்இஆட்சியும் ஏற்படுத்தப்படுவதற்கு எடுக்கபபடும் காத்திரமான நடவடிக்கைகள் தொடர்பில் இஸ்லாத்தின் எதிரிகள் அச்சம் கொண்டுள்ள நிலையிலேயே படுமோசமான தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில பாதிக்கப்பட்டுள்ள சிவில் சமூகத்தினரின் பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பது வெறும் கேள்விக்குறியான நிலையில் இந்த சகோதர மக்களுக்காக இந்த புனிதமிகு ரமழானில் நாம் பிரார்த்தணைகளை செய்வது மிகவும் பொருத்தமானதாகும்.

பிழையான கருத்தாடல்கள், எமக்குள் பொறுத்தமற்ற விமர்சனங்கள், கழுத்தறுப்புக்கள், காட்டிக் கொடுப்புக்கள் என்பனவற்றை புறந்தள்ளி ‘லாயிலாஹ இல்லல்லாஹூ முஹம்மதுர் ரஸூலுள்ளாஹ்’ என்ற கலிமாவை இந்த உலகில் மேலோங்கச் செய்வதற்கு ஒன்றுபடுவோம்.

Published by

Leave a comment