வத்திகான்: பாதிரியார்களின் பாலியல் குற்றத்தால் பாதிப்படைந்த சிறுவர்களிடம் போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.சமீபகாலமாக சில கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் பிஷப்களால் உலகளவில் சிறுவர் – சிறுமிகள் பலர் பாலியல் குற்றத்துக்கு ஆளாகி பாதிக்கப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், வத்திகான் நகரில் நேற்று நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் பாதிரியார்களின் பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் நீண்ட உரையாற்றினார் போப் பிரான்ஸிஸ்.
“பாதிரியார்களின் ‘செக்ஸ்’ குற்றத்தை மறுந்துவிடும்படி உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் உங்களுக்கு செய்த கொடுமைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.அதற்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்.
இருந்தாலும் அவர்கள் செய்த குற்றத்தையும் பாவச் செயல்களையும் விட்டு விடுங்கள். அவர்களின் செயலுக்காக உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்டு அதற்கு அடிமையானவர்கள் மற்றும் தற்கொலை செய்தவர்களை நினைக்கும்போது மிகுந்த மனவேதனையாக உள்ளது”
என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.பிரார்த்தனையின்போது போப்பின் ஆங்கில உரை, ஸ்பெயினில் மொழி பெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
Published by


Leave a comment