‘நெய்மார் இல்லாவிட்டாலும் போராடுவோம்’ ஸ்கோலரி

scolari brazil– MJ

றியோ: இன்று இடம்பெற இருக்கும்உலகக் கிண்ண அரையிறுதிச் சுற்றின் முதலாவது போட்டி, ‘ஸ்டேடியோ மினிரோ’வில் போட்டியை நடாத்தும் பிரேசில் அணிக்கும், ஜேர்மனிக்கும் இடையில்  இடம்பெற இருக்கின்றது.

பிரேசில் அணியின் இளம் நட்சத்திரமான நெய்மார் கடந்த காலிறுதிப்போட்டியில் கொலம்பியாவுடனான ஆட்டத்தில் உடல் உபாதைக்குள்ளாகி மைதானத்திலிருந்து வெளியேறினார். நெய்மார் இல்லாத பிரேசிலா என பிரேசில் மக்கள் ஏங்கித் தவிக்கும் இந்நிலையில், ‘நெய்மார் இல்லாவிட்டாலும், சொந்த மண்ணில் பிரேசில் மிகச் சிறப்பாக ஜேர்மனியை எதிர்த்துப் போராடும்’ என்பதாக பிரேசில் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் ஃபிலிப் ஸ்கோலரி தெரிவித்து, மக்களுக்கும் நம்பிக்கையை ஊட்டியிருக்கின்றார்.

neymar

22 வயதான நெய்மார், பிரேசிலுக்காக 4 கோல்களைப் போட்டுள்ளார். ஜேர்மனியின் நட்சத்திர வீரர் முல்லரும் 4 கோல்களைப் போட்டி இருவரும் சமநிலையில் இருக்கின்றனர். கொலம்பியாவின் ஜேம்ஸ் ரொட்ரிகுஸ் 6 கோல்களை போட்டு ‘கோல்டன் ஸ்கோரர்’ வரிசையில் முதலிடத்தில் இருக்கின்றார். ஆனால் ‘கோல்டன் பூட்’ எனப்படும் தங்க காலணியைப் பெற முல்லருக்கு இன்னும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

இதற்கிடையில், பிரேசில் அணியின் தலைவர் தியாகோ சில்வா, தேவையில்லாத செயற்பாடை கடந்த போட்டியில் மேற்கொண்டதால் மஞ்சள் அட்டை பெற்றார். தொடர்ந்து இரு போட்டிகளிலும் மஞ்சள் அட்டை பெற்றதால் சில்வா இன்றைய போட்டியில் விளையாட முடியாது. இதுவும் பிரேசிலின் தளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

எனினும், பலம்பொருந்திய ஜேர்மனியை சமாளிப்பது பிரேசிலுக்கு சவாலாகவே இருக்கும் என விளையாட்டு வல்லுனர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

sports

Published by

Leave a comment