காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் விஷேட தேவையுடையோர் மற்றும் வறிய இளம் விதவைகளுக்கான 2014 வருடாந்த ரமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு கடந்த 6 ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி அன்வர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சர் பஷீர் ஷேகுதாவூத் கலந்து கொண்டார்.
இதன் போது உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சர் பஷீர் ஷேகுதாவூத்தினால் விஷேட தேவையுடையோர் மற்றும் வறிய இளம் விதவைகளுக்கு ரமழான் உலர் உணவு விநியோகிக்கப்பட்டது.
இங்கு சிறப்புரையை முன்னாள் காழி நீதிபதி எம்.எம்.எம்.மஹ்றூப் கரீம் ஜேபி நிகழ்த்தினார்.
இதில் விஷேட இப்தார் நிகழ்வும் இடம் பெற்றது
இந் நிகழ்வில் காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் அஹமது அப்கர், அம்பாறை உதவி பிரதேச செயலாளர் அன்ஸார் , காத்தான்குடி அமானா வங்கி முகாமையாளர் அலி, ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அமீன் பலாஹி, மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் அஷ்ஷேய்க்- அப்துல் கபூர் மதனி ,ஜாமியதுல் பலாஹ் அறபுககல்லூரியின் செயலாளர் கவிமணி மௌலவி புஹாரி பலாஹி, தென்கிழக்கு பல்கலைக்கழுகத்தின் விரிவுரையாளர் மன்சூர் ,பொறியியலாளர் றிஸாத் மற்றும் உலமாக்கள், பள்ளிவாயல்களின் தலைவர்கள், கல்விமான்கள், சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் பொருளாளர் தாஹிர் ஜே.பி, அதன் சிரேஷ்ட துணைத் தலைவர் நஸார் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விஷேட தேவையுடையோர் மற்றும் வறிய இளம் விதவைகளுக்கான 2014 வருடாந்த ரமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் நான்கு ஆண்டுகளுக்குள் 31 வது சமூகத்தை நோக்கிய பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment