கொழும்பு: பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எச்சரிக்கை விடுத்த கோட்டை பிரதான நீதவான் திலினி கமகே, மீண்டும் இவ்வாறு நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிப்பொன் ஹோட்டலில் நடைபெற்ற ஜாதிக பலசேனா ஊடகவியலாளர் மாநாட்டிற்குள் புகுந்து ஆவணங்களை பறித்துச் சென்றமை, குர்ஆனை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
கடந்த வழக்கு விசாரணையின் போது முறைப்பாட்டாளர் தரப்பு சட்டத்தரணிகளை அவமதிக்கும் வகையில் பேசியது தொடர்பில் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் விளக்கமளித்தனர். இதன் போது கருத்துத் தெரிவித்த நீதவான் சட்டத்தின் முன் அனைவரும் சமன் எனவும் எவருக்காகவும் ஆஜராக சட்டத்தரணிகளுக்கு உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
சட்டத்தரணிகளை அவமதிக்கும் வகையில் பேசியது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக் குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதே வேளை குர்ஆனை அவமதிக்கும் வகையில் பேசிய இருவட்டை முஸ்லிம் விவகார பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்புமாறும் நீதவான் பணித்தார்.
Published by

Leave a reply to nizamhm1944 Cancel reply