12 வருடங்களுக்குப் பின் பிரேசில் அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவு: பிரேசில் ‘போர்க்கள’த்தில் ஜேர்மனியைச் சந்திக்கிறது!

luiz– MJ

றியோ: சற்று முன்னர் இறுதிவரை பலத்த சவால்களுக்கு மத்தியில் இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதிச் சுற்றின் இரண்டாவது போட்டியில் பிரேசில் கொலம்பியாவை 2:1 எனும் கோல் அடிப்படையில் வெற்றிபெற்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருக்கின்றது.

ஆரம்பத்தில் பிரேசிலின் பலம் அதிகரித்திருந்தாலும், இரண்டாம் பகுதியின் இறுதிவேளையில் கொலம்பியாவின் ஆட்டம் மிகச் சிறப்பாகவே இருந்தது. கொலம்பியா எங்கே இரண்டாவது கோல் போட்டுவிடுவார்களோ என்ற அச்சம் பிரேசில் வீரர்களுக்கும் இரசிகர்களுக்கும் மத்தியில் இருந்ததைக் காணமுடிந்தது. இறுதி நேரத்தில் கொலம்பியாவுக்கு கோல் போடக் கிடைத்த பல சந்தர்ப்பங்களை கொலம்பியா வீரர்கள் தவறவிட்டனர்.

காலிறுப் போட்டியின் முதலாவது போட்டியில் பிரான்ஸை ஜேர்மனி 1:0 எனும் கோல் அடிப்படையில் இலகு வெற்றிபெற்றது. இதனடிப்படையில் ஜேர்மனி எதிர்வரும் 8ம் திகதி செவ்வாய்க்கிழமை பிரேசிலை அரை இறுதிப்போட்டியில் சந்திக்கிறது.

luiz

இந்த உலகக் கிண்ணப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிவரும் அணிகளாக பிரேசில் மற்றும் ஜேர்மனி அணிகள் மக்களால் எதிர்பார்க்கப்பட்டது.

மிகச் சிறப்பாக விளையாடிவரும் ஜேர்மனி, சொந்த மண்ணில் பிரேசிலை வீழ்த்துமா என்பதே இன்றைய உலகம் எதிர்பார்த்திருக்கின்றது. பிரேசிலின் இளம் நட்சத்திரம் நெய்மார், ஜேர்மனியின் முன்னனிக் கழகமான பேயர்ன்மியூனிக் கழகத்திற்கு விளையாடி வரும் ஓர் வீரர். நிச்சயமாக அரை இறுதிப்போட்டி ஓர் போர்க்களமாகவே இருக்கப்போகின்றது.

colombia

2002 ஆம் ஆண்டு ஜப்பான், கொரியா ஆகிய இரு நாடுகளும் இணைந்து நடாத்திய உலகக் கிண்ணப் போட்டியில் பிரேசில் உலகச் சம்பியன் கிண்ணத்தை வென்றது. இதன் பின்னர் அதாவது 12 வருடங்களின் பின்னர் பலம் பொருந்திய பிரேசில் அணி, அரையிறுதிப்போட்டிக்குத் தெரிவாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

neymar

Published by

Leave a comment