பாலமுனை: பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் டுபாய் நாட்டின் தாருல் பிர் இஸ்லாமிய நிறுவனத்தின் அனுசரனையில் 250 பேருக்கான விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 04-07-2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் மஸ்ஜிதுல் அம்மார் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் தலைவர் ஏ.எச்எம். அமானுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இவ் விஷேட இப்தார் நிகழ்வில் 250க்கு மேற்பட்ட பொது மக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது நோன்புகளை திறந்தனர்.
இங்கு றமழான் தொடர்பான விஷேட மார்க்க சொற்பொழிவை அஷ்ஷெய்க் எம்.ஏ.சீ.ஜெய்னுலாப்தீன் (மதனி) நிகழ்த்தினார்.
இவ் விஷேட இப்தார் நிகழ்வில் உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Published by




Leave a comment