சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் விஷேட தேவையுடையோர் மற்றும் வறிய இளம் விதவைகளுக்கான 2014 வருடாந்த ரமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு

ILMI ahamed lebbe– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் விஷேட தேவையுடையோர் மற்றும் வறிய இளம் விதவைகளுக்கான 2014 வருடாந்த ரமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு எதிர்வரும் 06-07-2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.45 மணிக்கு காத்தான்குடி அன்வர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சர் பஷீர் ஷேகுதாவூத் கலந்து கொள்ளவுள்ளார்.

விஷேட தேவையுடையோர் மற்றும் வறிய இளம் விதவைகளுக்கான 2014 வருடாந்த ரமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் நான்கு ஆண்டுகளுக்குள் 31 வது சமூகத்தை நோக்கிய பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ILMI ahamed lebbe
இல்மி அஹமட் லெவ்வை

Published by

Leave a comment