காலி: பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட காலி போப்பே பொத்தல மரசெதுக்கல் கிராமம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
காலி கலேகானை போப்பே பொத்தல கிராமத்தில் மேற்படி நிகழ்வு நேற்று (4) இடம்பெற்றது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் பிரதியமைச்சர் வீரகுமார திசாநாயக்காவின் பங்குபற்றலுடன் மேற்படி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
பாரம்பரிய கைவினை கைப்பணி கிராம அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக தேசிய அருங்கலைகள் பேரவையினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்பிரகாரம் தேசிய அருங்கலைகள் பேரவையினால் அபிவிருத்தி செய்யப்பட்ட போப்பே பொத்தல மரசெதுக்கல் கிராமத்திற்கான வசதிகள் தொழிற்துறையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
முன்பதாக நிகழ்விற்கு வருகைதந்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து நினைவுக்கல்லினை ஜனாதிபதி திரைநீக்கம் செய்து வைத்தார்.
தொடர்ந்து அக்கிராமத்தில் பாரம்பரிய கைவினை கைப்பணி தொழிற்துறையாளர்களின் கைவினைப் பொருட்களை பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
இதனையடுத்து அங்குள்ள சமூகசேவைகள் வளாகத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி பிரதான வாயிலில் வைத்து வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த கைப்பணியாளர்களது கைவினைப் பொருட்களைப் பார்வையிட்டதுடன் அவர்களுடனும் கலந்துரையாடினார்.
தொடர்ந்து சிறப்பாக அமைக்கப்பட்ட அரங்கிற்கு ஜனாதிபதி அழைத்து வரப்பட்டார்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் வீரகுமார திசாநாயக்க, அமைச்சர் பியசேன கமகே, தென்மாகாண ஆளுநர் திருமதி குமாரிபாலசூரியா, பாராளுமன்ற உறுப்பினர் றமேஸ் பத்திரன, அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் புத்தி கீர்த்தி சேன, தேசிய வடிவமைப்பு நிலையத் தலைவர் மார்சல் ஜனதா உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.
Published by



Leave a comment