கொழும்பு: மாகாண சபை தேர்தல் சட்டத்தின்படி இடப்பரப்பு மற்றும் சனத்தொகைக்கேற்ற, உறுப்பினர் தெரிவுக்கமைய ஊவா மாகாணத்தின் பதுளை மற்றும் மொன ராகலை மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக் கையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இரண்டாவது பெரிய மாவட்டமான மொனராகலை யிலிருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 03 உறுப்பினர்களால் அதிகரிக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரியொருவர் கூறினார். இதற்கிணங்க மொனராகலை மாவட்டத்திற்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 இலிருந்து 14 ஆக அதிகரிக்கப்படும்.
இதேவேளை பதுளை மாவட்டத்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 03 இனால் குறைக்கப்படவுள்ளது.
இதன்படி இதுவரை தெரிவு செய்யப்பட்டு வந்த 21 உறுப்பினர்கள் 18 உறுப்பினர்களாக குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத் தக்கது.
மொனராகலை மாவட்டத்திற்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையினை அதிகரித்தமைக்கும் பதுளை மாவட்டத்திற் கான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைந்தமைக்கும் எல்லை நிர்ணய சபை மேற்கொண்ட தீர்மானமே காரணம் தவிர இதில் எந்தவொரு அரசியல் செலவாக்கும் கிடையாதென அமைச்சரவை பேச்சாளர் தகவல் ஊடகத்துறையமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.
Published by

Leave a comment