கொழும்பு: இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் நம்முடைய அரச ஆஸ்பத்திரிகளில் அனுமதி பெற்று இலவசமாக பெரிய சத்திரசிகிச்சைகளைக் கூட முடித்துச் செல்கின்றனர். இலவச சுகாதார சேவை இலங்கைப் பிரஜைகளுக்கு மட்டுமே உள்ளது.
எனவே எமது அரச ஆஸ்பத்திரிகளில் அனுமதி பெறும் நோயாளர்கள் தாம் இலங்கை பிரஜை என்பதை உறுதிப்படுத்தும் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டை அல்லது அதற்கு சமமான ஆளடையாளங்களை உறுதிப்படுத்தும் ஆவணத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டுமென சுகாதார பணிப்பாளருக்கும், பணிப்பாளர் நாயகத்துக்கும் உத்தரவிட் டிருப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக அயல்நாடுகளிலிருந்து வருவோர் எமது அரச ஆஸ்பத்திரிகளில் அனுமதி பெற்று பெரிய சத்திரசிகிச்சைகளைக் கூட இலவசமாகச் செய்வதுடன். நோயைக் குணப்படுத்திக்கொண்டு நாடு திரும்புகின்றனர். இவ்வாறு செயற்பட்டவர்களின் பெயர்களும் எம்மிடம் உண்டு.
இவர்களின் நிறம் ஒன்றே. மேல்நாட்டு வெள்ளை துரை ஒருவர் வந்தால் அடையாளம் காணலாம். ஆனால் எமது வலயத்தின் நட்புறவு நாடுகளின் உள்ளோர் நம்மைப் போன்றவர்களே. இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டு மென்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எமது இலவச சுகாதார சேவையின் முக்கியத்துவத்தை பெறுமானத்தையும் வெளிநாட்டவர்கள் நன்கு அறிந்துள்ளனர்.
இந்தியா, மாலைதீவு, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து எமது நாட்டின் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வந்து அநேகர் சிகிச்சை பெறுகின்றனர். தமது நாட்டைவிட குறைந்த செலவில் சிறந்த தனியார் துறை சுகாதார சேவையை பெறும் வசதியுள்ளது.
Published by


Leave a comment