அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் 35 அடி நீள மலைப்பாம்பு!

snakeஅக்கரைப்பற்று: அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியின் 60வது மைல் கல் பிரதேசத்தில் அமைந்துள்ள நீண்ட அடர் வனப் பகுதியை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியின் குறுக்காக சுமார் 35 அடி நீளமான மலைப் பாம்பு படுத்துறங்கியதால் இவ்வீதியின் போக்குவரத்து சுமார் அரை மணி நேரம் தடைப்பட்டது.

இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (01) காலை 5.30 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

பொத்துவில் வீதியின் ஊறணி 60ஆம் கட்டை பிரதேசங்கள் மிக அடர்த்தியான மேட்டுப்பாங்கான காட்டுப்பிரதேசமாகும். உமிரி கடற்கரையிலிருந்து ஆரம்பிக்கும் காடானது சாகாமம் பிரதேசத்திற்கு நீண்டு செல்கின்றது. இது ஒரு தொடர் வனப் பகுதியாகும்.

இந்த 60வது மைல் கல் பிரதேச பிரதான வீதியில் அடிக்கடி யானைகளின் ஊடறுப்பும் வாகன தடைகளும் ஏற்படுவது சர்வசாதாரனம்.

மலைப்பாம்பு வீதியில் படுத்திருந்தது இதுவே முதல்முறையாகும். சம்பவதினம் குறுக்காக பாரிய மரக்குற்றி போடப்பட்டு வீதி மறிக்கப்பட்டது.

பிரயாணிகளும் வாகன சாரதிகளும் இது மலைப்பாம்பு என தெரிவித்தனர். பாம்பு படுத்து உறங்குவதால் வாகனங்களின் ஹோன் சத்தங்கள் எழுப்பியும் பாம்பு நகரவில்லை.

மலைப்பாம்பு சுமார் அரை மணி நேரத்திற்கு பின் மெதுவாக அருகிலுள்ள காட்டிற்குள் நகர்ந்து சென்றதை மக்கள் வேடிக்கையாகவும் ஆச்சரியமாகவும் பார்த்துள்ளனர். TK

Published by

Leave a comment