காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் டுபாய் நாட்டின் தாருல் பிர் இஸ்லாமிய நிறுவனத்தின் அனுசரனையில் 250 பேருக்கான விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 03-07-2014 இன்று வியாழக்கிழமை காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் ஜாமிஉத் தௌஹீத் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் தலைவர் எம்.ஐ.கே.முஹம்மது ஜேபி தலைமையில் இடம்பெற்ற இவ் விஷேட இப்தார் நிகழ்வில் 250க்கு மேற்பட்ட பொது மக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது நோன்புகளை திறந்தனர்.
இங்கு ‘றமழான் மாதம் எந்த நோக்கத்துக்காக எமக்கு அருளப்பட்டது’ எனும் தலைப்பில் றமழான் தொடர்பான விஷேட மார்க்க சொற்பொழிவை அஷ்ஷெய்க் எம்.எம்.மன்சூர் மதனி நிகழ்த்தினார்.
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஒவ்வெறு வருடமும் றமழான் மாதத்தில் இவ்வாறான விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வுகளை நடாத்தி வருவதாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் செயலாளர் ஏ.எம்.எம்.மிஹ்ழார் தெரிவித்தார்.
Published by




Leave a comment