றியாத்: உள்நாட்டுப் போர் உச்சகட்டமாக நடைபெற்று வரும் ஈராக் நாட்டின் எல்லையில் சவூதி அரேபியா தமது 30 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்ததுள்ளது. ஈராக்கில் ஷியா அரசுக்கு எதிராக சுன்னி முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பிடியில் சிக்கிய நகரங்களை மீட்க ஈராக் ராணுவம் போராடி வருகிறது.ஈராக் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிரியாவின் நகரம் ஒன்றை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தாங்கள் ஏற்கனவே சிரியா நாட்டில் கைப்பற்றிய பகுதிகளையும், ஈராக்கின் வடக்கு எல்லையோரம் கைப்பற்றிய பகுதிகளையும் ஒன்றாக இணைத்து இஸ்லாமிய தேசம் என்ற ஒரு நாட்டை உருவாக்கியுள்ளனர்.
இந்நிலையில், சவூதி அரேபியா தங்களது நாட்டுக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுறுவிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் எல்லையில் ராணுவ வீர்களை குவித்துள்ளது. சுமார் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் சவூதி அரேபியா – ஈராக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சவுதி-ஈராக் எல்லையில் ஈராக்கிய இராணுவத்தினர் பின்வாங்கியதையடுத்து, 900 கி.மீ. நீளமான எல்லைப் பகுதியில் இந்த 30,000 இராணுவ வீரர்களையும் சவுதி அரேபியா நிறுத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by
![Saudi_Arabia_border[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/07/saudi_arabia_border1.jpg?w=150&h=112)


Leave a comment