அமெரிக்காவின் வேண்டுகோள்: அமெரிக்கா, பிரித்தானிய விமான நிலையங்கள் பலத்த பாதுகாப்பில்…

security– MJ

லண்டன்: தற்பொழுது வளைகுடாவில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பாரிய இணைய பாதுகாப்பினை செயற்படுத்தி வருகிறது அமெரிக்கா. இதற்கிணங்க அமெரிக்காவின் வோஷிங்கடன் ஆகாய பாதுகாப்பு படைப்பிரிவு விடுத்திருக்கும் அவசர வேண்டுகோளிற்கிணங்க அமெரிக்காவும் பிரித்தானியாவும் பாதுகாப்பு இணையத்தள வலையமைப்பை ஏற்படுத்தி தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.

சிரியா மற்றும் ஈராக்கில் ஏற்பட்டிருக்கும் இஸ்லாமிய போராட்டக்குழுக்களின் கெடுபிடியில் அமெரிக்க இராணுவம், ஈராக் இராணுவத்திற்கும், சிரியா இராணுவத்திற்கும் வழங்கிய ஏராளமான ஆயுதங்கள் தற்பொழுது இப்போராளிகளிடம் மாட்டியிருக்கின்றன.

இப்போராட்டக் குழுக்களில் பிரித்தானிய குடியுரிமை பெற்ற சில முஸ்லிம் இளைஞர்களும் இணைந்திருப்பதை அண்மையில் இஸிஸ் அமைப்பு வெளியிட்ட ஒளிநாடாவில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

விமானம் உட்பட எந்தவொரு நவீன இராணுவ தளபாடங்களையும் கச்சிதமாகக் கையாளக்கூடிய திறமை இப்போராளிகளிடம் இருக்கின்றன.

security (2)
லண்டன் விமான நிலையத்தின் பாதுகாப்பு

இதற்கிடையில் பிரித்தானிய பிரதமர் பிரித்தானியாவின் பாதுகாப்பிற்கு சகல மக்களினது ஒத்துழைப்பையுத் எதிர்பார்ப்பதாக வினயமான வேண்டுகோளை விடுத்திருக்கின்றார்.

அமெரிக்காவின் விமான நிலையங்களும், இராணுவ தளங்களும் பலத்த பாதுகாப்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பிரித்தானியாவின் விமான நிலையங்களும் தற்பொழுது பலத்த பாதுகாப்பில் இருந்து வருவதுடன், ஆயுதம் ஏந்திய விசேட பொலிஸாரும் தீவிர பாதுகாப்பில் இருந்து வருகின்றனர்.

பயணிகளின் பொதிகள் மற்றும் பிரயாண ஆவனங்கள் பலத்த சோதனைக்கு உட்பட்டு வருகின்றன.

security
லண்டன் விமான நிலையத்தின் பாதுகாப்பு

Published by

Leave a comment