நீ
மதவாதக்
கதையெழுது !
துறவிகளை
கதா நாயகர்களாக்கு !!
பள்ளி உடை !!!
அரசமரம் நடு !!!
வீடு கொளுத்து !!!
வியாக்கியானம் பேசு !!!
புத்தனுக்கு
புதுப் புது சிலை வை !
எங்கள்
சங்கத் தமிழை
உந்தன்
கொச்சை மொழியால்
புண் ஆக்கு !
அதில்
சிந்திச் சிதறும்
செங் குருதியில்
உன் கழுத்துக்கு
சால்வை உண்டாக்கு !
வேட்டியும் சட்டையும்
வெள்ளையில் உடுத்தி
உன்னை நீயே
சாமாதனப்புறா என்று
பூசிமெழுகு
நெஞ்சு நிமிர்த்தி நட
ஏன் என்று
உன்னை கேட்க்கும்
ஐநாக்கும்
அவர் அனுப்பும்
மைனாக்கும்
நாம் எல்லோரும்
ஒருதாய் மக்கள் என்னும்
பூச்சாண்டிக் கதை எழுது
உன்
புண்ணாக்கு கதை எழுது !!!


Leave a comment