குருக்கல்மடத்தில் கடத்தப்பட்டவர்களின் முறைப்பாடுகளை பதிவதற்காக -காத்தான்குடி நகர சபைக்கு -ஜூலை மாதம் 5 திகதி களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய அதிகாரிகள் வருகை

police– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: 1990ம் ஆண்டு காலப்பகுதியில் குருக்கல்மடத்தில் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட புதைகுழிகள் தோண்டுவது சம்பந்தமாக தொடரேட்சியான நடவடிக்கைகளின் பிற்பாடு காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் சட்டமா அதிபரை கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த புதைகுழிகள் தோண்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதனடிப்படையில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யுமாறு ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க கடத்தப்பட்ட உறவினர்களில் சிலர் முறைப்பாடுகள் செய்திருந்தார்கள்.

இதனை தொடர்ந்து இப் புதைகுழிகளை தோண்டுவதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி அன்று களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தினால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குறிப்பாக 1990ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் திகதி குருக்கல்மடத்தில் வைத்து கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவரினதும் முறைப்பாடுகளை களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யும் நோக்கில் சிரமங்களை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க விஷேடமாக எதிர்வரும் சனிக்கிழமை அதாவது 05ம் திகதியிலிருந்து காத்தான்குடி நகர சபையில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய அதிகாரிகள் முறைப்பாடுகளை பதிவதற்காக வருகை தரவுள்ளனர்.

police

ஏற்கனவே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கிடம் பதிவு செய்தவர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் காரியாலயத்தில் இருந்து தொலைபேசி மூலம் வரவழைக்கப்பட்டு குறிப்பிட்ட ஒவ்வொரு நாளும் 15 பேர் வீதம் அழைக்கப்பட்டு விஷேடமாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய அதிகாரிகள் முன்னிலையில் காத்தான்குடி நகர சபையில் வைத்து முறைப்பாடுகள் செய்வதற்காக அழைத்துச்செல்லப்படுவார்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

Published by

Leave a comment