றியாத்: மத்திய கிழக்கில் தற்பொழுது நிலவும் அதி உஷ்ண காலநிலையையும், புனித ரமழானையும் கருத்திற்கொண்டு, வெளியில் வேலைசெய்யும் தொழிலாளர்களை மதிய நேரத்தில் வேலைக்கு அமர்த்தியதன் காரணமாக, குற்றச்சாட்டின் பேரில் 187 நிறுவனங்களுக்கு சவுதி அரசாங்கம் தடை விதித்திருக்கின்றது.
கடந்த மாதமே இவ்வறிவித்தலை சகல வெளிவேலை நிறுவனங்களுக்கும் ஒப்பந்தக் காரர்களுக்கும் சவுதி அரேபிய தொழிலமைச்சு அறிவுறுத்தியிருந்தது.
48 பாகை செல்சியஸ் உஷ்ணம் நிலவிய கடந்த சில நாட்களில் 484 பணியாளர்கள் மதிய வேளையில் பணியில் இவ்வாறான நிறுவனங்களால் பனிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.
தணடப் பணமாக 3,000 தொடக்கம் 10,000 சவுதி றியால் வரை இச்சட்டத்தை மீறிய நிறுவனங்களுக்கு விதிக்கப்படும். இப்பணத்தை 30 நாட்களுக்குள் குறித்த நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment