றியோ: சற்று முன்னர் இடம்பெற்ற ஜேர்மனி மற்றும் அல்ஜீரியா அணிகளுக்கிடையிலான இரண்டாம் சுற்றின் 6வது போட்டியில் ஜேர்மனி — எனும் கோல் அடிப்படையில் வெற்றிபெற்று காலிறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியைச் சந்திக்கிறது.
ஆரம்ப 90 நிமிட போட்டி இரு அணிகளும் கோல்களின்றி சம நிலையில் நிறைவடைந்தது. எனினும் மேலதிக நேரத்தின் முதலாவது பகுதியில் ஜேர்மனி வீரர் ஸ்குரில் கோல் போட்டு ஜேர்மனியின் வெற்றிக்கு வழிசமைத்தார். இரண்டாவது பகுதியில் ஓசில் மற்றுமொரு கோலைப் போட்டி ஜேர்மனியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
போட்டியின் இறுதி நிமிடத்தில் அல்ஜீரிய வீரர் டிஜய்பு கோலொன்றைப் போட்டார். போட்டியில் ஜேர்மனி வெற்றிபெற்றாலும் அல்ஜீரியா இறுதிவரை களத்தில் கோலொன்றுக்காகப் போராடியது. எனினும் பலம்பொருந்திய ஜேர்மனி வீரர்களிடமிருந்து கோல் போட முடியாமல் இருந்தது அல்ஜீரிய வீரர்களுக்கு.
Published by


Leave a comment