Dr.அலவி சரீப்தீன் நிதியுதவியின் கீழ் முஅத்தின்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு

gift ramadan– எம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி: உலகத்தில் சரியான நேரத்திற்கு கடமைபுரிபவர்கள் யார் எனில் பள்ளிவாயல்களில் கடமைபுரியும் முஅத்தின்கள்தாம்  என கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது ஏனெனில் அவர்கள் உரிய வேளைக்கு அதான் சொல்கின்றனர் இவ்வாறு OPEN நிறுவனத்தின் பொருளாளர் எம் எம் ஏ ஷாகிர் தெரிவித்தார்.

Dr.அலவி சரீப்தீன் நிதியுதவியின் கீழ் OPEN நிறுவனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பள்ளிவாயல்களில் கடமைபுரியும் முஅத்தினார்களுக்கான உலர் உணவுப்பொதி வழங்கும் நிகழ்வு இன்று றமழான் மாதம் 1ம் நாள் ஆரையம்பதி பாலமுனை அபூபக்கர் சித்தீக் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

மேலும் அவர் தெரிவிக்கையில், 

உங்களின் பணி மகத்தானது. அல்லாஹ் மிக பெரும் கூலியை தங்களின் சேவைக்காக தரவுள்ளான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தற்போது வழங்கப்படும் இச்சிறு உதவியை மனமுவந்து பெற்றுக்கொள்ளுங்கள் அத்துடன் முஸ்லிம்களுக்காக துஆ செய்துகொள்ளுங்கள் எனத்தெரிவித்தார். 

OPEN நிறுவனத்தின் தலைவர் எம் சீ எம் ஐவ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு மனித உரிமை ஆணைக்குழு அதிகாரியும்,  நிறுவனத்தின் உறுப்பினருமான ஏ சி ஏ அஸீஸ் மற்றும் எஸ் எம் பைறூஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

abubakr mosqe palamunai

???????????????????????????????

gift ramadan

???????????????????????????????

Published by

Leave a comment