கொலம்பியா வெற்றி: காலிறுதி போட்டியில் பிரேசிலை சந்திக்கிறது
றியோ: சிறிய தென் அமெரிக்க நாடான கொலம்பியா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது. காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் கொலம்பியா, மற்றொரு சிறிய தென் அமெரிக்க நாடான உருகுவேயை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது.
ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற இந்தப் ஆட்டத்தில் கொலம்பிய அணியின் இரண்டு கோல்களையும் ஜேம்ஸ் ரோட்ரிகஸ் அடித்தார். முதல் கோல் 28 ஆவது நிமிடத்திலும், அடுத்தது 50 ஆவது நிமிடத்திலும் வந்தது.
ஆடுகளத்தில் கண்ணியமில்லாத வகையில் நடந்து கொண்டார் என்பதற்காக ஒன்பது போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸ், இந்தப் போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உருகுவே அணியை வென்றுள்ள கொலம்பியா, காலிறுதியில் பிரேசில் அணியை எதிர்கொள்ளும்.
Leave a comment