20 வயதுப் பெண்ணை மணந்தார் சுஹைப் அக்தார்

akthar– SHM

லாஹூர்: ராவல்பிண்டி எகஸ்பிரஸ் என அழைக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சுஹைப் அக்தார் திருமண வாழ்க்கையில் இணைந்துகொண்டார். தற்போது 38வயதாகும் அக்தார், 20 வயதான ரூபப் என்ற இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இப்பெண்ணை அக்தர் மணமுடிக்க உள்ளதாக கடந்த மாதமே ஊடகங்களில்  தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் 17 வயதுடைய பெண்ணை முடிப்பதாக தவறாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், கராச்சியின் அருகேயுள்ள ஹரிபூர் என்ற பகுதியில் நேற்று,  இத்திருமணம் நடந்தேறியது.மிக எளிமையான முறையில் ஒரு சில உறவினர்களை மட்டுமே அழைத்து, இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

இம்மாதம் 12ம்தேதி அக்தர் தனது பெற்றோருடன்,  ரூபப் வீட்டுக்கு சென்று திருமண ஏற்பாடுகளை பேசி முடித்ததாக பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. ரூபப்புக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். இவரின் தந்தை ஒரு தொழிலதிபராவார்.

akthar

Published by

Leave a comment