மட்/அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்கம் அமைத்தல்

alhira – எம்.எச்.எம். அன்வர்

காத்தான்குடி: காத்தான்குடியின் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டதும் ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பெரும் பாடசாலையான காத்தான்குடி மட்/அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்கம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பாக 30.05.2014 அன்று கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நோன்புப் பெருநாள் கழித்து பாரியதொரு பொதுச்சபைக் கூட்டம் ஒன்றினை நடாத்தவது என தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைவாக இப்பாடசாலையில் இதுவரையிலும் கல்விகற்ற பழைய மாணவர்கள் பாடசாலையில் அல்லது பாடசாலைக்கு முன்னால் அமைந்துள்ள ஐனாப். M.M. மிப்சி அவர்களின் இல்லத்தில் விண்ணப்பங்களைபெற்று அதனை பூரணப்படுத்திக்கொடுக்குமாறும் பாடசாலை முன்னேறுவதற்கான பங்களிப்பினை அனைத்து பழைய மாணவர்களிடமும் எதிர்பார்ப்பதாக பாடசாலையின் தற்காலிக பழைய மாணவர் சங்க தலைவர் MM. மிப்சி தெரிவித்தார்.

alhira

அத்துடன் எமது பழைய மாணவர் சங்கத்தில் சேரவுள்ள அனைவரும் கட்டாயமாக பெருநாள் கழித்து இடம்பெறவுள்ள பொதுச்சபைக்கூட்டத்திற்கு சமூகமளிப்பதோடு வெளிநாடு மற்றும் வெளியூர்களிலுள்ள சகோதரர்கள் மின்னஞ்சல் ஊடாக தங்களது விபரங்களை அனுப்பிவைக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புகளுக்கு:

M.M. Mifzi  077 3672567

M.H.M. Anwer  0777 397662 /   anwermhm@gmail.com

M. Sabry    077 0174027 // sabryn7@gmail.com 

Published by

Leave a comment