‘ஈராக் இனியும் ஒன்றாக இருக்க சாத்தியம் இல்லை’ – இஸ்ரேல் ஜனாதிபதி

israel– SHM

வோஷிங்டன்: ஈராக் இனிமேலும் ஒன்றிணைந்த தேசமாக இருக்க சாத்தியமே இல்லை என்று அமெரிக்கஜனாதிபதி ஒபாமாவிடம் தெரிவித்துள்ளார் இஸ்ரேல் ஜனாதிபதி சீமான் பெரிஸ். ஈராக்கில் உள்நாட்டுப் பிரச்சனைகளால் கலவரங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்நிலையில் அந்நாட்டு அரசியல் தலைவர்களுடன் மற்ற நாடுகள் பேச்சு வார்த்தை நடத்தி ஆலோசனை தெரிவிக்க கோரியிருந்தார் ஒபாமா.

இந்நிலையில் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசிய இஸ்ரேல் ஜனாதிபதி சீமான், பிளவு பட்டிருக்கும் ஈராக்கினை உள்நாட்டு தலைவர்கள் சுமுகமாக்க வேண்டும்.அங்கிருக்கும் 3 தரப்பினரும் இணைந்து செயல்படும் நிலையில், தகுந்த சமயத்தில் அமெரிக்காவும் தனது படைகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.ராணுவத்தால் மட்டுமே இந்த முடிவு கொண்டுவரப்பட கூடாது.

ஆனால், ஈராக் கட்சிகள் இதனை செய்யப் போவதில்லை என்று நன்கு தெரிகிறது. ஆகையால் ஈராக் இரண்டாக பிரிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Published by

Leave a comment