ஒட்டகப் பால் அருந்துவதில் ஆர்வம் காட்டும் அமெரிக்கர்கள்!

Camel– SHM

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒட்டக பாலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதிகமான அமெரிக்கர்கள் தற்பொழுது ஒட்டகப் பாலை மருத்துவ நோக்கம் கருதி அருந்திவருகின்றனர். இம் மாநில மக்கள் ஒட்டக பாலை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். கலிபோர்னியாவைச் சேர்ந்த வினியோகஸ்தரான டெசர்ட் ஃபார்ம்ஸ் நேரடியாகவும், 40க்கும் மேற்பட்ட கடைகள் மூலமாகவும் ஒட்டக பாலை விற்பனை செய்து வருகிறது.

இது குறித்து ‘டெசர்ட் ஃபார்ம்ஸ்’ தனது இணையதளத்தில் கூறியிருப்பதாவது, பசும்பாலுடன் ஒப்பிடுகையில் ஒட்டக பாலில் கொழுப்புச் சத்து 50 சதவீதம் குறைவு. இந்த பால் எளிதில் ஜீரணம் ஆகும். ஆனால் ஒட்டக பால் பசும்பாலை விட விலை அதிகம். ஆனால் அது தரும் பால் அபூர்வமானது என்று அது தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்காவில் ஒட்டகப் பாலை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

glass-of-milk[1]

 

 

Published by

Leave a comment