காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் புதிய நிருவாக சபை – 2014

subair CC– எம்.எச்.எம். அன்வர்

காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் 2014 ம் ஆண்டிற்கான பொதுச்சபைக்கூட்டமும் நிருவாக சபைத்தெரிவும் காத்தான்குடி-03, முகைதீன் மெத்தை ஜூம்ஆப்பள்ளியில் இடம்பெற்றது. 

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் 1985 ம்ஆண்டு இதன் ஸ்தாபகர் அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அகமது லெவ்வை அவர்களின் அயராத முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டு 58 பள்ளிவாயல்களையும் 165 ஐயும் தாண்டிய சமய சமூக கலாச்சார நிறுவனங்களையும் அங்கத்துவமாகக் கொண்ட நிறுவனமாகும்.

காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள முஸ்லிம் பிரதேசங்களையும் உள்ளடக்கிய சமய சமூக கல்வி கலாச்சார பண்பாட்டு மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்களில் கரிசனைகொண்டு 3 தசாப்தங்களை தாண்டிய நிலையில் இச்சம்மேளனம் வீறுநடை போடுவதாகவும் பாரிய சவால்களுக்கு மத்தியில் இச்சம்மேளனம் தமது பணியினை செய்வதாகவும் அதன் கடந்த கால செயற்பாட்டறிக்கையினை விளக்கமளிக்கும்போது உப செயலாளர் எம்.எம்.ஜௌபர் தெரிவித்தார்

federation

2014ம் ஆண்டிற்கான புதிய நிருவாக உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவர் எம்.ஐ. எம் சுபைர் C.C

subair CC

செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ எல் எம் சபீல் (நளீமி)

Sabeel-Naleemi-001[1]

பொருளாளர் பீ.எம்.பாயிஸ்

உப செயலாளர்கள் ஏ எல் ஸெட் பஹ்மி

எம்.எம். ஜௌபர்

federation

சம்மேளனத்தில் 12 உப குழுக்கள் காணப்படுகின்றன.

1.கூட்டு ஸக்காத் நிதியம்
2 ஹஜ் மற்றும் உம்றா குழு
3..கூட்டு உழ்ஹியா குழு
4.பாரிய நோய் நிவாரண நிதியக்குழு
5.கல்வி அபிவிருத்திச் சபை
6.காணி மற்றும் எல்லை நிர்ணய குழு
7.திருமண நல்லிணக்க சபை
8.பள்ளிவாயல்கள் நிருவாகத்தெரிவுக்குழு
9.கலை கலாச்சாரக்குழு
10.சம்மேளன நலன்புரி அமைப்பு
11 கொடுக்கல் வாங்கல் பிணக்குத்தீர்ப்புக்குழு
12 நிதிக்குழு

மேற்படி குழுக்களினூடாக வேலைத்திட்டங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Published by

Leave a comment