றியோ: பிரேசில் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் உலகக்கிண்ண கோல் சாதனையை சமன் செய்தார் ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் ரொனால்டோ உலகக்கிண்ணப் போட்டியில் அதிக கோல்கள் அடித்த சாதனை வீரராக உள்ளார். 1998, 2002, 2006 ஆகிய 3 உலகக்கிண்ணங்களில் விளையாடி 15 கோல்கள் அடித்து சாதனையை நிலைநாட்டிருந்தார்.
நேற்று நடந்த போட்டியில் சல்லே மன்டாரி, நேராக ஜேர்மனி கோல் காப்பளர் மானுயெல் நியூயரைத் தாண்டி கோல் அடித்தார் அப்போது 2- 1 என்று கானா முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் க்லோஸ் கோணர் உதையை நெரிசலான கானா வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி கோலாக மாற்றினார்.
இந்த கோல் பிரேசில் நட்சத்திரம் ரொனால்டோவின் உலக சாதனை கோலை சமன் செய்த கோலாக அமைந்தது.
அவர் 2002, 2000, 2010 ஆகிய 3 உலகக்கிண்ணத்தில் ஆடி 14 கோல்களில் இருந்தார். நேற்றைய கோல் மூலம் 15 கோல்கள் அடித்து ரொனால்டோவை சமன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
![klose[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/06/klose1.jpg?w=114&h=150)
![klose[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/06/klose1.jpg?w=320&h=419)
Leave a comment