அம்பாறை: அளுத்கமையில் இனவெறியாட்டக்காரர்களை கைது செய்து என்றும் இல்லாதவாறு தண்டனை கொடுத்தால்தான் இந்த பிரச்சனைக்கு முடிவுக்கட்ட முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிசுரடைய உயர்பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொருளாளரும், தேசிய பணிப்பாளருமாகிய ஏ.சி யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்ககையில்.
பொதுபலசேனாவினால் முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கமை தர்கா நகர் மற்றும் பேருவளையில் மேற்கொள்ளப்பட்ட கொலை வெறித்தாக்குதல் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பொதுபலசேனாவின் செயலாளருடைய செயற்பாடுகள் கொடூரமானது. இவருக்கு சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைத்தான் முழு சமூகமும் எதிர்ப்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
சக வாழ்வுடன் வாழும் சிங்கள முஸ்லிம் இனவுறவை இனவாதத்தினால் எரிய வைத்து அதில் குளிர்க்காயும் அயோக்கியமான கீழ்த்தரமான செயற்ப்பாட்டை பொதுபலசேனா போன்ற கீழ்சாதி இனவாத அமைப்புக்கள் புரிந்துக்கொண்டிருப்பது மிகவும் வேதனைமிக்க செயற்ப்பாடுமாத்திரமின்றி, இவர்களை முழு சமூகமும் கண்டிக்கதக்கதாகும்.
முஸ்லிம்கள் உண்ணும் உணவு, அணியும் ஆடை, மார்க்கக் கடமைகளையும் இடையுறுகளை விளைவித்து, இப்போது முஸ்லிம்களின் சொத்துக்களை எல்லாம் அளிக்கும் காரியத்தில் இறங்கியுள்ளார்கள்.
இந்த அமைப்பை உடன் அரசாங்கம் தடை செய்து அவர்களை கைது செய்ய வேண்டும்.
Published by

Leave a comment