காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 20-06-2014 நேற்று வெள்ளிக்கிழமை இரவு புதிய காத்தான்குடி அல் மனார் அர்ராஷித் மண்டபத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா மற்றும் றமழான் மாத ஒன்று கூடல் வைபவத்தில் முஸ்லிம் சமூகத்துக்காக பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றிவரும் இரு சமூக சேவையாளர்களுக்கு பட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் முதலாவது பட்டம் ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் முதல்வரும்,மூத்த ஆலிமுமான ஷெய்ஹூல் பலாஹ் எம்.ஏ.முஹம்மது அப்துல்லாஹ் (றஹ்மானி) முஸ்லிம் சமூகத்துக்கும் ,மார்க்க கல்விக்கும் ஆற்றிய அரும்பணிகளை பாராட்டும் முகமாக காதிமுல் இல்ம் (கல்விச் சேவகன்) எனும் பட்டமும் நினைவுச் சின்னமும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பிரமுகர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு
இதில் இரண்டாவது பட்டம் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் சமூகத்துக்கும் ,உலமாக்களுக்கும் ஆற்றிய அளப்பெரிய பணிகளை பாராட்டும் முகமாக காதிமுல் உம்மத் (சமூக சேவகன்) எனும் பட்டமும் நினைவுச் சின்னமும் மட்டக்களப்பு ,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைகளின் தலைவரும்,காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) உள்ளிட்ட பிரமுகர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உலமாக்கள்,புத்திஜீவிகள்,கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதிநிதிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Published by




Leave a comment