காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற பரிசளிப்பு விழாவும் றமழான் மாத ஒன்று கூடலும்

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற பரிசளிப்பு விழாவும் றமழான் மாத ஒன்று கூடல் வைபவமும் 20-06-2014 நேற்று வெள்ளிக்கிழமை இரவு புதிய காத்தான்குடி அல் மனார் அர் ராஷித் மண்டபத்தில் இடம்பெற்றது.

பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெப்பை (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் முதல்வரும்,மூத்த ஆலிமுமான ஷெய்ஹூல் பலாஹ் எம்.ஏ.முஹம்மது அப்துல்லாஹ் (றஹ்மானி) ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக் ,மட்டக்களப்பு ,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைகளின் தலைவரும்,காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய கதீப்மார் இமாம்களுக்கு பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன்,ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஸன் நிறுவனத்தினால் 86 கதீப்மார் இமாம்களுக்கு இலவச குடி நீர் இணைப்புக்காக வழங்கப்பட்ட வவுச்சரும் கையளிக்குப்பட்டதுடன், பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளன உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டது.

???????????????????????????????

இங்கு பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சௌதுல் குதபா, வல்அஇம்மதி எனும் சிறப்பு மலர் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் இம் மலர் தொடர்பான அறிமுகத்தை ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம்.எஷ்.எம்.புகாரி (பலாஹி) நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் சவூதி அரேபிய நாட்டு பிரமுகர்கள்,உலமாக்கள்,புத்திஜீவிகள்,கல்வியலாளர்கள்,ஊடகவியலாளர்கள் உட்பட காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதிநிதிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

???????????????????????????????

Published by

Leave a comment