காத்தான்குடியில் கதீப்மார் இமாம்களுக்கான நம்பிக்கை நிதியம் அமைக்க பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஐந்து இலட்சம் ரூபாய் நிதி அன்பளிப்பு

katheeb– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடியில் கதீப்மார் இமாம்களுக்கான நம்பிக்கை நிதியம் அமைக்க பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்திற்கு 5 (ஐந்து) இலட்சம் ரூபாய் நிதியை பணமாக அன்பளிப்பு செய்துள்ளார்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற பரிசளிப்பு விழாவும் றமழான் மாத ஒன்று கூடல் வைபவமும் 20-06-2014 நேற்று வெள்ளிக்கிழமை இரவு புதிய காத்தான்குடி அல் மனார் அர் ராஷித் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கதீப்மார் இமாம்களின் நன்மைகருதி அவர்களுக்கான நம்பிக்கை நிதியம் அமைக்க காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி), பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெப்பை (பலாஹி) ஆகியோர்களிடம் மேற்படி நிதியை அன்பளிப்பு செய்தார்.

katheeb

Published by

Leave a comment