றியோ: தற்பொழுது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் கோஸ்ட்டாரிக்கா, இத்தாலியை 1-0 எனும் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்குள் அந்த அணி நுழைந்துள்ளது.
அணியின் தலைவர் பிரெயின் ரூயிஸ், ஆட்டத்தின் முதல் பாதியில், 44 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்ததன் மூலம் தனது அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றார்.
இத்தாலியின் தோல்வியை அடுத்து, இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. முதல் போட்டியில் இத்தாலியிடமும், இரண்டாவது போட்டியில் உருகுவே அணியிடமும் அந்த அணி தோற்றது.
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளில் இரண்டாவது முறையாக கோஸ்ட்டாரிக்கா காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
1958 ஆம் ஆண்டுக்கு பிறகு, இங்கிலாந்து அணி முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.
Published by


Leave a comment