யாழ்: முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து கூட்டமைப்பு ஒழுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக மக்கள் முன்னணி தகவல் தொடர்பு மையம் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வடமாகாணசபை உறுப்பினர்கள் பா.உறுப்பினர்கள் கண்டனக் குரல்களை எழுப்பியிருந்தனர்.
அமைச்சர் ஜங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு பேராட்டத்தில் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டிருந்ததுடன் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒன்றுபட்ட செயற்பாட்டினூடாகவே இலங்கையில் அமைதியும் உரிமையுடன் கூடிய வாழ்வு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாத்தியப்படும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இங்கு கண்டனக் குரலை வெளியிட்ட வடமகாணசபை உறுப்பினர் அஸ்மின்,
‘எமக்குள் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் இருந்தாலும் மனிதர்கள் என்ற புள்ளியிலே நாம் இன்று ஒன்றாகி இருக்கின்றோம். இந்த தமிழ் சகோதரர்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இது நல்ல முன்னுதாரணம் தமிழர்களின் போராட்டம் இன்றுவரை நின்று நிலைக்கின்ற தென்றால் அதற்கு ஒரு நியாயம் இருந்தது என்பதை நான் இங்கு கூற விரும்புகின்றேன்.நான் வன்முறைகள் நடந்த தர்க்கா நகர் பேருவளைக்கு சென்ற போது அங்கு முஸ்லிம் தாய் என்னை பார்த்து கேட்டார் பிரபாகரன் எங்கே என்று கேட்டார் .நான் அவரை பார்த்து ஏன் என்று கேட்டேன் அதற்கு அந்த முஸ்லிம் தாய் சொன்னார் பிரபாகரன் இருந்திருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலைமை நேர்ந்திருக்காது என்று’ அஸ்மின் கூறினார். TW
Published by

Leave a reply to Azeeza Azeez Cancel reply