பலஸ்தீன் அகதிப் பெண்ணை மணக்கிறார் துபாய் இளவரசர்

dubai– AF-80

துபாய்: பலஸ்தீனத்தைச் சேர்ந்த பெண் அகதியை மணக்கவிருக்கிறார் துபாய் இளவரசர் ஹம்தான் பின் முகம்மது அல் மக்தூம். கலிலா எனும் இவர் பலஸ்தீனத்தைச் சேர்ந்தவர். இஸ்ரேல் தாக்குதலில் வீட்டை இழந்து தெருக்களில் தங்கி கஷ்டத்தை அனுபவித்தவர். இவரைத்தான் தற்போது துபாய் இளவரசர் மணம் புரியவுள்ளார்.

28 வயதாகும் இளவரசர் ஹம்தான், துபாய் மன்னர் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூமின் 2வது மகன் ஆவார். கடந்த மாதம் மார்ச் மாத்த்தில்தான் கலிலாவைச் சந்தித்தார் ஹம்தான். அப்போதே காதல் கொண்டு விட்டார். மணக்கவும் முடிவு செய்தார்.

ஒரு அறக்கட்டளைப் பணிக்காக பணியாற்றியபோதுதான் கலிலாவைச் சந்தித்துள்ளார் ஹம்தான். கவிதை எழுதுவது, தொண்டுப் பணிகளில் ஈடுபடுவது, துணிச்சலான சாகச காரியங்களில் ஈடுபடுவது என பன்முகம் கொண்டவர் இளவரசர் ஹம்தான்.

கடந்த, 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் இவருக்கும், இவரது உறவினரான ஷேக்கா அல் மக்தூமுக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது முறிந்து விட்டது. இந்த நிலையில்தான் தற்போது கலிலாவை மணக்கவிருக்கிறார் ஹம்தான்.

dubai

 

Published by

One response to “பலஸ்தீன் அகதிப் பெண்ணை மணக்கிறார் துபாய் இளவரசர்”

  1. ILAVARASARIN THIRUMANA VAALKKAIYAI YELAIPPENNUDAN…VAALTHTHUKKAL>>>>>>>>>>>>>>>>>>>>>

Leave a comment