கொழும்பு: பயங்கரவாதி பொதுபல சேனாவையும், அதற்கு ஆதரவாகச் செயற்படும் அரசாங்கத்தையும் கண்டித்து மாபெரும் ஹர்த்தால் ஒன்றை நேற்று அகில இலங்கை ரீதியில் முஸ்லிம் பிரதேசங்கள் மேற்கொண்டிருந்தன.
முஸ்லிம் மக்கள் மாத்திரமன்றி, தமிழ் மக்களும் இந்த முஸ்லிம்களின் ஹர்த்தாலுக்கு சில பிரதேசங்களில் தங்களது பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தனர்.
ஆடிப்போனது அரசாங்கம்:
அழுத்கமையில் லாவகமாகக் கலவரத்தைத்தூண்டிவிட்டு, இருநாட்கள் தலைமறைவாகி இருந்த இந்த அரசாங்கமும் அதனது கூட்டாளிகளும், ஆரம்பத்தில் கிழக்கு மாகாண முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட கடந்த செவ்வாய்க்கிழமை ஹர்த்தாலின்போது ஆடிப்போனது.
தனது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூலிப்படைகளை ஏவியும்கூட இந்த ஹர்த்தாலை இவர்களால் நிறுத்த முடியாமல் போனது.
ஆனாலும், நேற்று இடம்பெற்ற அகில இலங்கை ரீதியான ஹர்த்தால் ஏற்பாட்டால் அரசாங்கம் உண்மையில் மேலும் ஆடிப்போனது.
இதன் எதிரொலி, அரசாங்கத்துக்கும் முஸ்லிம் அமைச்சர்களுக்குமிடையில் சில கருத்து மோதல்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த ஹர்த்தாலின் பின்னர் இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமையின் பலம் என்ன என்பதை அரசாங்கம் தெளிவாக அறிந்துகொண்டுள்ளது.
அரசாங்கத்தின் மிரட்டல்:
அழுத்கமையில் தீவிரவாதத்தைத் தூண்டி, காடைத்தனம் புரிந்தவர்களைக் கண்டிக்க முடியாத அரசாங்கமும், அவர்களது கூலிப்படையினரும், ஹர்த்தாலை மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு எதிராக மிரட்டல்களை விடுத்திருந்தனர். அவற்றில் ஒன்றுதான் ‘ இலங்கையில் ஹர்த்தால் மேற்கொள்வது ஆரோக்கியமானதொன்றல்ல’ என இராணுவ அதிகாரி மிரட்டலொன்றை நேற்றைய முன்தினம் ஒன்றை விடுத்திருந்தார்.
இதேபோல், ஏறாவூரில் பொலிஸாரையும், ஏனைய பிரதேசங்களில் தனக்கு அதிவிசுவாசமான அரசியல் பிரதிநிதிகளையும் ஏவி, ஹர்த்தாலைத் தடுத்து நிறுத்த அதிகப்பியத்தனம் எடுத்திருந்தது ஆளும் அரசாங்கம்.
அசந்துபோன முஸ்லிம் தலைவர்கள்:
இதில், முஸ்லிம் அரசியல்வாதிகளும், அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவும் உள்ளடங்கும்.
நான்கு உயிர்களும், பள்ளிவாயல்களும், முஸ்லிம்களின் சொத்துக்களும் சேதமடைந்து, இலங்கை மக்கள் கொதித்தெழுந்து, 48 மணி நேரத்துக்குப் பின்னர்தான் ஒருவர் பின் ஒருவராக இவர்களுள் சிலர் சென்று குறித்த மக்களை பார்வையிட்டனர். சில அறிக்கைகளையும் காற்றில் பறக்கவிட்டனர்.இவர்களுக்கு, அரசாங்கத்தைத் தொடர்பு கொள்வதற்கு இலத்திரனியல், அச்சு, தொலைபேசி ஆகிய அதிநவீன வசதிவாய்ப்புக்கள் இருந்தும், ஜனாஸாக்கள் கப்றுக்குள் சென்ற பின்னர்தான் அறிக்கையை விட்டனர். அல்லது சென்று பார்த்தனர்.
வேடிக்கை என்னவென்றால், இவர்களின் அறிக்கைகளில் பொதுபலசேனாவை தடைசெய்ய வேண்டுமென்றோ, இந்தத் தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட வேண்டும் என்றோ எள்ளளவும் குறிப்பிட்டிருக்கவில்லை!கடல்கடந்த ஆர்ப்பாட்டம்:
குவைத், இந்தியா, லண்டன், மற்றும் ஜேர்மனியில் ஒரு சகோதரரின் போராட்டம் இவைகள் அனைத்தும், இலங்கை அரசாங்கத்தை ஆட்டம்காண வைத்தன.
‘முஸ்லிம்களின் பலவீனம்’ என்ற தப்புக்கணக்கு:
தம்புள்ளைப் பள்ளி விடயத்தில் எவ்வாறு முஸ்லிம் தலைவர்களைவைத்து முஸ்லிம்களை மடையர்களாக்கினோமோ, அதேமாதிரித்தான், இந்த அளுத்கம விடயத்தையும் மேற்கொள்ளலாம் என இவர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால் சதிகாரர்களுக்கெல்லாம் சதிகாரனான அல்லாஹ் ஒற்றுமையான முஸ்லிம்களுக்கு தனது உதவியை வழங்கினான்.
கிழக்கு மக்களை மறக்கக்கூடாது:
நேற்றைய ஹர்த்தால் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு இரண்டாவது ஹர்த்தால். ஒருநாள் கடையை மூடினால் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்பது கூறத்தேவையில்லை.
அப்படி இருந்தும், அரசியல் அழுத்தங்களை துச்சமென மதித்து, தன் சமூகத்துக்காகக் குரல்கொடுக்க இரண்டாம் நாளும் கடைகளைப் அடைத்து ஹர்த்தால் அணுஷ்டிட்ட காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் கல்முனை மக்களை மறக்க முடியாது.
புறக்கோட்டை வர்த்தகர்களின் தியாகம்:
இலங்கையில் என்னதான் இடம்பெற்றாலும், தங்களது வியாபார நாட்களில் புறக்கோட்டை வர்த்தகர்கள் ஒருபோதும் ஹர்த்தாலை அணுஷ்டிக்க மாட்டார்கள்.
1990, விடுதலைப் புலிகளால் காத்தான்குடி பள்ளிவாயலில் மெற்கொள்ளப்பட்ட படுகொலையின் போது அன்று இலங்கையின் அனைத்து முஸ்லிம் நகரங்களிலும் கடைகள் மூடிப்பட்டிருந்தன. அவற்றுள் புறக்கோட்டையும் ஒன்று.
1990 இன் பின்னர் முதன் முதலாக இந்த வர்த்தகர்கள் இலங்கை முஸ்லிம்களுக்காக ஹர்த்தாலை அணுஷ்டித்திருந்தனர்.
முஸ்லிம்களின் பொருளாதாரம்:
இலங்கையிலுள்ள முஸ்லிம் நகரங்கள் அனைத்தையும் ஒரு நாளைக்கு இழுத்து மூடினால் சுமார் பல கோடி ரூபாய் பணவைப்புக்கள் இலங்கையின் மொத்த வங்கிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இத்தொகை சாதாரணமானதல்ல. வங்கிகளில் வைப்புக் குறைந்தால் மத்திய வங்கிக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் இலங்கையின் வர்த்தகத்தில் பாதிப்பேற்படும்.
இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் வர்த்தக நகரங்களில் உள்ள வங்கிகளே கூடியவைப்புக்களை தங்களது வங்கிகளில் வைத்திருக்கின்றன.
எனவே அரசாங்கம் முஸ்லிம்களை இனிமேலும் சீண்டினால் அது அரசாங்கத்திற்கே பாதிப்பு ஏற்படும் என்பதை தயவு செய்து அரசாங்கத்திற்கு விசுவாசமானவர்கள் தெரிவித்துக் கொள்ளுங்கள்.
இவ்வருடத்திற்கான சிறந்த நகைச்சுவை விருதுகள்:
அழுத்கமை சம்பவம் என்ன என்பதும், அதன் பின்னணி, பாதிப்புக்கள் என்ன என்பதும், விரல் சூப்பும் மழலை முதல் அல்-ஜஸீரா ஊடகம் வரை சென்றிருக்கும் நிலையில், எமது பெயர்தாகங்கி அரசியல்வாதிகள் சிலர், அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக பல நகைச்சுவையான வார்த்தைகளை உதிர்ந்திருக்கின்றார்கள்.
இந்த வார்த்ததைகள்தான் இவ்வருடத்திற்கான சிறந்த நகைச்சுவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இந்த முஸ்லிம் பெயர்தாங்கிகளுக்கு ‘நகைச்சுவை விருது-2014’ வழங்க இருப்பதாகவும் சகோதரப்பற்றுள்ள முஸ்லிம் சமூகம் பேசிக்கொள்கிறது.
முடிவு: ஒற்றுமையே எங்கள் பலம்.
அல்ஹம்துலில்லாஹ்!!!
Published by

Leave a reply to YL.MANSOOR Cancel reply