தனது மனைவியிடம் சில்மிஷம் புரிந்தவர்களை களத்தில் ஓர் கை பார்த்தார் சகிப் அல் ஹஸன்: விளையாட்டரங்கில் சம்பவம்!

shakib-al-hasan-wife[1]– S-90

டாக்கா: பங்களாதேஷ் கிரிக்கெட் நட்சத்திரம் ஷகிப் அல் ஹசனின் மனைவி உம்மி அகமது சிஷிரிடம் சில்மிஷம் செய்ததாக தொழிலதிபரின் மகன் ஒருவரை பங்களாதேஷ் பொலீஸார் கைது செய்துள்ளனர்.ஜூன் 15ம் தேதி இந்தியா, வங்கதேசம் இடையே நடந்த ஒரு நாள் போட்டியின்போது மிர்பூர்  மைதானத்தில் வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டார் அந்த நபர்.

இதையடுத்து ஷகிப் அல் ஹசன் மிர்பூர் பொலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பின்னர் பொலீஸார், 23 வயதான ரஹீத் என்பவரைக் கைது செய்தனர். ரஹீத், பிரபல தொழிலதிபர் பஸ்லூர் ரஹ்மானின் மகன் ஆவார்.ரஹீத்துடன் மேலும் சிலரும் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர்களையும் கைது செய்ய பொலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவத்தின்போது உம்மியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பலரை மைதான காவலர்களேப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்ததாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. அதுமாத்திரமன்றி, ஷகிப் அல் ஹசனும் களத்தில் இறங்கி சம்பந்தப்பட்ட கும்பலை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

shakib-al-hasan-wife[1]

Published by

Leave a comment