மும்பை: உலகக்கிண்ண கால்பந்து தொடரில் கிண்ணத்தை ஜேர்மனி அணி வெல்ல வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் கோஹ்லி கூறியுள்ளார். இந்த ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகள் பிரேசிலில் நடந்து வருகின்றன. இப்போட்டிகள் ரசிகர்களை மட்டுமல்லாது கிரிக்கெட் வீரர்களையும் கவர்ந்துள்ளது.
ஜேர்மனி அணி போர்ச்சுகலை வீழ்த்திய போது முல்லரின் ஹட்ரிக் கோல்லை பார்த்து வியந்து டுவீட் செய்திருந்தார் கோஹ்லி.
இது பற்றி கூறிய கோஹ்லி,
‘நான் ஜேர்மனி வீரர் பிலிப் லாம் என்பவரது விசிறி. இவருடைய பணி நேர்த்தி எனக்கு பிடித்தமானது. இவர்தான் ஜேர்மனி அணிக்கு நிறைய வழிகளை உருவாக்கித் தருகிறார்.
மேலும் இந்த முறை ஜேர்மனி உலகக்கிண்ணத்தை வெல்லவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் அந்த அணி அபாயகரமான அணியாக திகழ்கிறது.
இந்த ஆண்டு ஜேர்மனியின் ஆண்டாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இதைத் தவிர்த்து எனக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி, ஆகியோரது ஆட்டமும் மிகவும் பிடிக்கும்’ என்று கூறியுள்ளார்.
Published by

Leave a comment