றியோ: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கொஸ்டாரிகாவை வென்றால் தமக்கு இங்கிலாந்து ராணியின் முத்தம் தேவை என்று இத்தாலி வீரர் மரியோ பலோடெலி விசித்திர விருப்பம் தெரிவித்துள்ளார்.20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இரவு இத்தாலி- கொஸ்டாரிகா அணிகள் மோதுகின்றன.
இத்தாலி அணி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்தில் கொஸ்டாரிகா வெற்றி பெற்றால் இங்கிலாந்து போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.இத்தாலி வெற்றி பெற்றால் இங்கிலாந்து அணிக்கு சிறிது வாய்ப்பு இருக்கும். இதனால் இத்தாலியின் வெற்றியில்தான் இங்கிலாந்தின் இருப்பு இருக்கிறது.
இந்த நிலையில் இத்தாலியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மரியோ பலடொலி தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று இத்தாலி வென்றுவிட்டால்இ இங்கிலாந்து ராணியிடம் இருந்து முத்தம் எனக்கு வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
Published by


Leave a comment