அளுத்கமை கலவரம்: இரகசிய குறுந்தகவலை அம்பலப்படுத்தினார் அசாத் சாலி

asad– SHM

கொழும்பு:  அளுத்கம, தர்ஹா நகர் மற்றும் வெலிப்பன வன்முறைச் சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார். அவர் இதேபோல் எத்தனையோ தடவை கூறியிருக்கிறார். ஜனாதிபதி சொன்னதைச் செய்ததே இல்லை என்கிறார் அசாத் சாலி.

கடந்த இரண்டு மாத்திற்கு முன்னர் எஸ்.எம்.எஸ் ஒன்று வெளிவந்திருந்தது. ஜனாதிபதியும், கோத்தபாயவும் நாட்டிலிருந்து வெளியில் செல்வார்கள். அவர்கள் சென்ற பின்னர் முஸ்லிம்கள் மீது தாக்கப்படுமென வெளியாகியிருந்தது. அது தற்போது நிறைவேறியிருக்கிறது.

கொழும்பு. மாநகர சபை முன்னாள் பிரதி மேயரும் தமிழ், முஸ்லிம் கட்சியின் தலைவருமான அசாத் சாலி ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் மேற்கண்டவாறு கூறினார்.

Published by

One response to “அளுத்கமை கலவரம்: இரகசிய குறுந்தகவலை அம்பலப்படுத்தினார் அசாத் சாலி”

  1. Unmaithaan. Naanum antha SMS sapanthma vifraththai muhanoolil paarthu athai Save panninean.

Leave a comment