பொதுபலசேனாவுக்கு எதிராக லண்டனில் இடம்பெறும் ஆர்ப்பாட்டம்

london1– MJ

லண்டன்: பிரித்தானியாவாழ் இலங்கை முஸ்லிம்களால் லண்டனில் தற்பொழுது ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது. இலங்கையில் பயங்கரவாதச் செயல்களை முஸ்லிம்கள் மீது கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்டுவரும் பொதுபலசேனா எனும் தீவிரப்போக்கான பௌத்த அமைப்பைத் தடைசெய்யக் கோரி இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

பொதுபலசேனாவினால் இலங்கையில் களுத்துறை மாவட்டம் அழுத்கம, தர்ஹா நகர் மற்றும் வெலிப்பன உட்பட ஏனைய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குழந்தை உட்பட 4 சகோதரர்கள் ஷஹீதாக்கப்பட்டனர். பள்ளிவாயல்கள், மற்றும் முஸ்லிம் மக்களுடைய கடைகள், வீடுகள் என்பன தீக்கிரையாக்கப்பட்டன.

இதுவரைக்கும் இலங்கை அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்யாமல், முஸ்லிம்களை மடையர்களாக்கி, அரசியல் வாதிகளையும், தனக்கு விசுவாசமான மதப் பெரியார்களையும் தனது காலடியில் வைத்து, முஸ்லிம்கள் மீதான இவ் அநியாயத்தை ஓர் சிறிய சம்பவமாக சித்தரித்து வருகின்றது.

இலங்கை முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளோ, அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவோ இதுவரைக்கும் கண்டனைங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாமலிருக்கும் இந்நிலையில் இக்கண்டனப் பேரணி உலகத்தின் கவனத்தை ஈர்த்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

photo 5

photo 2

london1

london2

london3

london4

Published by

Leave a comment