காத்தான்குடி: கடந்த 30 வருடங்களாக இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகமாக வட-கிழக்கு மக்கள் இருந்து வருகின்றனர். இன்று வரைக்கும் எங்களுக்கு ஏற்பட்ட உயிரகள் மற்றும் சொத்துக்களின் இழப்புக்களை ஈடுசெய்ய முடியாது.
இலங்கையில் வேறூன்றி இருந்த பயங்கரவாதத்தை முற்றாக அகற்றி, சமாதானத்தை எங்களுக்கு அர்ப்பணித்த இந்த அரசாங்கத்தின் முழுப்பொறுப்பிலும்தான் பயங்கரவாதக்குழுவான பொதுபலசேனா உதயம்பெற்று, இன்று முஸ்லிம்களையும் அவர்களது சொத்துக்களையும் சூரையாடி வருகின்றனர்.
ஒரு நாட்டின் மந்திரிபோல், உயர்தரமான வாகனங்கள் கொடுத்து, அதற்கு மேல் பாதுகாப்பும் வழங்கி, பொதுபலசேனாவின் தலைவர்கள் இலங்கையில் உலாவருகின்றனர்.
எப்போது ஹலாலை நாங்கள் விட்டுக்கொடுத்தோமோ அன்றுடன் எங்கள் சமூகத்தின் மான, மரியாதைகள் எல்லாவற்றையும் பேரினவாதத்துக்குக் கொடுத்துவிட்டோம்.
அதன்பின்னர் தம்புள்ளைப் பள்ளிவாயல், இலங்கையின் ஏனைய சில பள்ளிவாயல்கள், குர்ஆன் மத்ரஸாக்கள் போன்றவற்றை இழக்கும் அபாயத்தில் இருந்துவருகிறோம்.
இன்று முஸ்லிம்களின் உயிர்கள் பதறப்பதற பறிக்கப்பட்டு,உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டு, இளம் பெண்கள் விதவையாக்கப்பட்டு, குழந்தைகள் அநாதையாக்கப்பட்டிருக்கின்றன.
இலங்கை ஜம்மியத்துல் உலமாவும், இலங்கை பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெறும் சுமார் 20 மக்கள் பிரதிநிதிகளும், தங்கள் கண்களை இறுக்மூடிவிட்டு உல்லாசமாக படுத்துறங்கிவிட்டு, எல்லாம் முடிந்த பின்னர் அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள், பொறுமையா இருங்கள் என்ற வேதவாக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலகுவாகச் சொல்லிவிட்டு போய்விடுகின்றனர்.
அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள், பொறுமையாக இருங்கள் என்பதை முஸ்லிம் சமூகத்துக்கு இவர்கள்தான் சொல்லவேண்டும் என்பதில்லை.
இச்சம்பவத்திற்குப் பின்னர், பொறுப்பில்லாத இத்தகைய அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் அமைப்புக்கள், முஸ்லிம் அமைச்சர்கள் விடயத்தில் மக்களுக்கு நமபிக்கையற்றுப் போய்விட்டன.
இன்றுவந்து எத்தகைய ஆறுதல்களை இவர்கள் கூறினாலும், பிரிந்த உயிர்களுக்கு ஈடாகுமா?
இந்த ஷஹீதுகளுக்கு அல்லாஹ் சுவனத்தை வழங்குவானாக! பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிப்பானாக.
நேற்று இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களிடத்தில் இருந்த பொதுபலசேனாவுக்கு எதிரான உணர்வுகள், வேறு எந்த முஸ்லிம் பகுதிகளிலும் காணமுடியவில்லை! இது எங்களுக்கு மட்டும்தான் உரித்தானதா?
ஒரு சமூகத்துக்கு ஏற்படும் பிரச்சினை அச்சமூகத்தினால் மாத்திரமே உலகுக்கு எத்திவைக்க முடியும் என்ற நிலைப்பாடு இலங்கையில் இருக்கின்றது. முஸ்லிம்களின் ஒருமித்த இணையத்தள உறவின் காரணமாகவே களுத்திரை கலவரம், உலகை தீயாய் எரித்தது.
இந்த அரச சார்பான பொதுபலசேனாவை இனிமேலும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் வளர்க்கவிட்டால், நாளை இன்னுமொரு முஸ்லிம் ஊர் எரிந்து சாம்பலாகிவிடும்.
எனவே, இலங்கை முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்து, இந்த பொதுபலசேனாவினை இலங்கையிலிருந்து பூரணமான களைந்தெறிய ஒன்றுசேர்வோம்.
இந்த பொதுபலசேனா பயங்கரவாதம் மேலும் இத்தகைய காடைத்தனத்தை இலங்கை முஸ்லிம்கள் மேற்கொண்டால் தயவுசெய்து அனைத்து இலங்கை முஸ்லிம்களும் தங்களது கண்டணங்களைத் தெரிவிக்க முன்வாருங்கள. இவர்களின் சதிவலையில் விழும் மற்றுமொரு ஊர் நாளை உங்களுடையதாகவும் இருக்கலாம். (அல்லாஹ் பாதுகாப்பானாக).
அல்லாஹ்வை மாத்திரம் நம்பி, சமூகத்துக்காக களமிறங்குவோம்.
30 வருட போராட்டத்தின் பின்னரே விடுதலைப்புலிகள் அழித்தொழிக்கப்பட்டனர். பொதுபலசேனா அழிவதற்கு இன்னும் அதிக நாட்கள் ஆகாது…. இன்ஸா அல்லாஹ்.
Published by




Leave a comment