அளுத்கமை, தர்கா நகர்  வன்முறைகள்: கிண்ணியா நகரசபையில் கண்டன பிரேரனை!

kinniya uc– ரைஸ்

கிண்ணியா: கிண்ணியா நகரசபையின் 39 வது சபை அமர்வு கிண்ணியா நகரசபையின் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றது. நாட்டில் தற்போது அரங்கேற்றப்பட்டிருக்கும் மத வன்முறை சம்பந்தமான கண்டனப் பிரேரனை முன்வைக்கப்பட்டது.

மக்களினது நலனையும் மதத்தின் பாதுகாப்பினையும் கருத்திற் கொண்டு இன வன்முறைகளையும் கலவரங்களையும் அரங்கேற்றுவதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதேவேளை சாதி, மத, இன வேறுபாடுகளுக்கப்பால் இன வன்முறைகளையும் கலவரங்களையும் தூண்டி செயற்பட்டவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவந்து தண்டிக்கப்பட வேண்டும்.

அத்தோடு இவ்வனர்த்தின் போது பாதிக்கப்பட்டோருக்கு பக்கச் சார்பில்லாது உதவிகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாரான அசம்பாவிதங்கள் வேறு இடங்களுக்கு பரவாமல் இருப்பதையும், நடைபெறாமல் இருப்பதையும் அரசாங்கம் உறுதி செய்வதோடு மக்கள் மத்தியில் புகுத்தப்பட்டிருக்கும் அச்ச உணர்வையும் அரசாங்கம் இல்லாது செய்யவேண்டுமெனவும் சபை அமர்வின் போது ஏகமானதாக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கிண்ணியா நகரசபையின் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.

Published by

Leave a comment