பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்

hiz6– பழுலுல்லாஹ் பர்ஹான்

களுத்துறை: சவூதி அரேபியாவில் இருந்து நேற்று திங்கட்கிழமை இரவு நாடு திரும்பிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இன்று செவ்வாய்க்கிழமை அளுத்கம, தர்கா நகர், பேருவளை போன்ற இடங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களையும், மக்களையும் பார்வையிட்டதுடன் இவ்வாறான நாசகார செயல்களை செய்த பௌத்த தீவிரவாத அமைப்புக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்தார்.

அத்துடன் அளுத்கம பிரதேச செயலாளர் மற்றும் தவிசாளர் ஆகியோருடன் முற்றாக எரிந்து நாசமாக்கபட்ட ‘மஸ்ஜிதுல் நூர்’ பள்ளிவாசலை பார்வையிட்டதுடன் உடனடியாக அந்த பள்ளிவாயலை இரண்டு மாடிக் கட்டிடமாக மீளமைத்து தருவதாக வாக்குறுதியளித்தார்.

நாசகார செயல்களால் பாதிக்கப்பட்டு அகதிகளாக தஞ்சம் அடைந்த மக்களுக்கு உடனடியாக நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்க்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் இந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்த குடும்பதிற்க்கு தனது சொந்த நிதியில் இருந்து தலா 50000ஃஸ்ரீ ரூபாவினை வழங்கியதுடன் இந்த மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்காக பிரதி பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி மேலதிக பாதுகாப்பை பெற்றுகொடுத்தார்.

hiz9

அத்தோடு நாளை இந்த மக்களின் இயல்பு வாழ்க்கையினை மீள கொண்டு வருவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு தரப்பினை பணித்தார்.

இந்த நாசகார செயல்களை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமனவும் குறிப்பிட்டதோடு இந்த மக்களுக்காகவும் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கும் துஆ செய்யுமாறும் ,இந்த நாட்டில் இவ்வாறான அசாதாரண சூழ்நிலையின் போது மக்கள் அவதானமாக செயற்படுமாறும் தனது கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிட்டார்.

hiz3

hiz6

Published by

Leave a comment