– கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
டோஹா: இலங்கையில் அளுத்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இனவாதிகளின் தாக்குதலினால் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ள முஸ்லிம் மக்களுக்கு தமது ஆழ்ந்த கவலையினை கட்டார் வாழ் இலங்கை மக்கள் தெரிவித்துள்ள அதே வேளை இம்மக்களினது விமோசனத்திற்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இடம் பெற்ற இந்த சம்பவத்தில் மூவர் சஹீதானதாகவும், 80 க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான செய்தியினையடுத்து கட்டார் வாழ் இலங்கை மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதனையடுத்து கட்டாரில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் ஒன்று கூடி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
அதே வேளை இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பில் கட்டார் வாழ் பெரும்பான்மை மக்களுக்கு அறிவுறுத்தல்இதுாதரக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல்.கட்டார் முக்கிய பிரதி நிதிகளை அறிவுறுத்தல் மற்றும் மறைக்கப்படும் செய்திகளை சர்வதேச ஊாடகங்கள் மூலம் வெளிக் கொண்டுவருதல் என்பன தொடர்பில் காத்திரமான பொறுப்புணர்வுடன், இன ஒற்றுமையின் தளம்பலை பாதிக்ககாத வகையில் தொண்டு பணிகளை முன்னெடுப்பதற்கான குழுக்களும் இதன் போது தெரிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் பாதிக்குள்ளான நிலையில் அவசர தேவைகள் கோரப்பட்டுள்ள நிலையினை கவனத்திற் கொண்டு சில உதவும் பணிகளை துரிதமாக முன்னெடுக்கவும் இந்த கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
அதே வேளை பாதிப்புக்குள்ளான மக்களின் முன்னேற்றம் தொடர்பில் அதி கூடிய கவனத்தை செலுத்துவது கட்டார் வாழ் இலங்கை மக்களின் முக்கிய பணியாகும் என்றும் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சகோதரர் ஒருவர் தெரிவித்தார்.
Published by
![Qatar_Flag3[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/qatar_flag31.jpg?w=150&h=112)
Leave a comment