நீரிழிவு நோய் தொடர்பான இலவச வைத்திய முகாம் காத்தான்குடியில்

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ‘பயனுள்ள சேவையினை வழங்குவதன் மூலம் உலகிற்கு சுபிட்சம்’ எனும் தொனிப் பொருளில் 2014 உள்ளுராட்சி வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீரிழிவு நோய் தொடர்பான இலவச வைத்திய முகாம் 16-06-2014 இன்று திங்கட்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

3 பி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அனுசரனையில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இவ் இலவச வைத்திய முகாமில் காத்தான்குடி தள வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் ரி.கௌரி சங்கரினால் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றது.

இங்கு பொது மக்களுக்கு நீரிழிவு நோய் தொடர்பான இரத்தப் பரிசோதனையும்,வைத்திய ஆலோசனையும் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டது.

???????????????????????????????

இதன் போது இவ் நீரிழிவு நோய் தொடர்பான இலவச வைத்திய முகாமை நடாத்துவதற்கு ஓத்துழைப்பு வழங்கிய வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பரினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் காத்தான்குடி தள வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் ரி.கௌரி சங்கர்,மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை வைத்தியர் டாக்டர் ஏ.எம்.ஏ.சுக்ர்,கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான அலி சப்ரி,பாக்கீர், 3 பி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.ஆரிப் உட்பட அதன் பிரதிநிதிகள், வைத்திய தாதியர்கள்,நீரிழிவு நேயாளர்கள்,பொது மக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

???????????????????????????????

Published by

Leave a comment