காத்தான்குடி: பேரினவாதக் காடையர்களால் கடந்த இரண்டுவருடங்களாக அத்துமீறிச் சென்றுகொண்டிருக்கும் இலங்கை முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையின் உச்சகட்டம் இன்னும் அளுத்கமையிலும், பேருவளையிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆண்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில், முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் நிலையில், இலங்கை முஸ்லிம்களுக்காக இலங்கை முஸ்லிம்கள் இணையத்தளங்களில் தங்களது குரல்களை ஒலிரச்செய்து வருகின்றனர்.
பேரினவாதக் காடையர் கும்பலின் அடாவடித்தனத்தை நேற்று பி.பி.சி. தமிழ், பி.பி.சி. சிங்களம் மற்றும் அல்-ஜெஸீரா ஆகிய உலக ஊடகங்கள் வெளிக்கொணர்ந்திருந்தன.
இன்று காலை உலகம் விடிவதற்குள் உலகின் மூலை முடுக்குகள் எங்கிலும் இலங்கை முஸ்லிம்கள் பேரினவாதிகளின் கும்பல்களால் நசுக்கப்படுவதை பறைசாட்டவேண்டும். உலகம் அறியவேண்டும். இன்ஷா அல்லாஹ்!!!
http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/06/140615_aluthgamariots.shtml
Published by

Leave a comment